ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மெகராஜ் மாலிக். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒரே ஒரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ என்றால் இவர்தான். தோடா பகுதியில் உள்ள மக்களால் எம்எல்ஏ வாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். தற்போது இவர் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் ஒழுக்க சீர்கேடுகளில் ஈடுபட்டதாக கைதுச் செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசு இணையதள சேவையை துண்டித்து ஊரடங்கு உத்தரவு செவ்வாய்க்கிழமை முதல் தோடாவில் அமல்படுத்தப் பட்டுள்ளது.
இந்த பரபரப்பில் பெண் ஒருவர் எம்எல்ஏவின் கைது குறித்து பேஸ்புக் நேரலையில் பேசி உள்ளார். இதைக் கண்ட பெண்ணின் கணவர் லைவ் நிகழ்ச்சியை நிறுத்த சொல்லி உள்ளார். இருப்பினும் அப்பெண் கேட்காமல் கணவரை கெட்ட வார்த்தையால் திட்டி விட்டு வீடியோவை தொடர்ந்து உள்ளார். கோபமடைந்த கணவர் மனைவியை தாக்கியது லைவில் பார்த்த அனைவருமே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த வீடியோ இணையதளத்தில் பரவி தற்போது கணவன் மனைவி இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தடையை மீறி வீடியோ போட்டதுக்காக மனைவியையும். மனைவியை தாக்கியதற்காக கணவனையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
