“ஆசை யார விட்டுச்சு”.. 20 வயது மருமகனுடன் கள்ளத்தொடர்பு… கணவனைக் கொன்று புதைத்த 45 வயது மனைவி… நாட்டையே உலுக்கும் பரபரப்பு சம்பவம்..!

By Nanthini on புரட்டாதி 11, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கணவனை கொன்று புதைத்து விட்டு மனைவியின் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷிவ்பீர் என்பவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் ஷிவ்பீர் மாயமான நிலையில் அக்கம் பக்கத்தினர் கேட்டபோது லட்சுமி தனது கணவர் வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டதாக கூறியுள்ளார். இருந்தாலும் கணவர் குடும்பத்தினருக்கு லட்சுமி மீது சந்தேகம் இருந்ததால் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் தன்னுடைய கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும் லட்சுமிக்கு அவரது 20 வயது மருமகனுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதற்கு கணவர் தடையாக இருந்ததால் அவரை கொலை செய்ய முயற்சி செய்து அவரை புதைத்ததாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய லட்சுமி மற்றும் அவரது மருமகனை கைது செய்துள்ள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ள தொடர்புக்காக கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது