“அய்யோ, என்ன காப்பாத்துங்க”… ஆட்டோ ரிக்ஷாவில் தொங்கியபடி 1.5 கி.மீ தூரம் கத்திக்கொண்டே சென்ற பெண்… ஷாக்கிங் வீடியோ….!

By Nanthini on புரட்டாதி 11, 2025

Spread the love

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா பகுதியில் ஆட்டோவில் ஏறிய பெண் ஒருவரிடம் ஓட்டுநருடன் சேர்ந்து மூன்று பேர் திருட முயற்சித்துள்ளனர். இதனை அறிந்து கொண்ட அந்தப் பெண் தப்பிக்க நினைப்பதற்குள் ஆட்டோ கிளம்பிவிட்டது. இருந்தாலும் தன்னுடைய தைரியத்தை எந்த சூழலிலும் கைவிடாத அந்தப் பெண், ஆட்டோவில் இருந்து வெளியே தொங்கியபடி யாராவது என்னை காப்பாத்துங்க என்று கத்திக்கொண்டே சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் வரை பயணித்துள்ளார்.

சாலையில் சென்ற சிலர் அவரை கவனித்த நிலையில் ஆட்டோவை மடக்கிப் பிடித்து திருடர்களை போலீசில் ஒப்படைத்தனர். அதிர்ச்சிகரமான சம்பவத்தில் ஒரு பெண் தன்னுடைய துணிச்சலாலும் விரைவான சிந்தனையாலும் ரிக்ஷாவில் நடந்த பகல் கொள்ளை முயற்சியிலிருந்து தப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அது தொடர்பான வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.