இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், “இபிஎஸ் செல்வாக்கை பார்த்து சிலருக்கு வயிற்றெரிச்சல்.. வயிற்றெரிச்சல் பிடித்த மனிதர்களுக்கு ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களுக்கு தோல்வியைத்தான் தரும்.
மூத்த முன்னோர்கள் இப்படி செய்தால் சாதாரண தொண்டர்கள் என்ன செய்ய முடியும்? எடப்பாடியை அசைத்து பார்க்கலாம் என்று கனவு கண்டால் தோற்பது நீங்களாகத்தான் இருப்பீர்கள்” என்று செங்கோட்டையனை மறைமுகமாக பேசியுள்ளார்.
