வாழ்க்கை சரியாக அமையவில்லை…. தங்கள் இரு குழந்தைகளுடன் சகோதரிகள் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சி சம்பவம்….!!!

By Srimathi on புரட்டாதி 10, 2025

Spread the love

தஞ்சாவூர் அருகே கல்லணை கால்வாய் 20 கண் பாலத்தில் நேற்று முன்தினம் மதியம், 5 வயது சிறுவன், 10 நாள் கைக்குழந்தையுடன், 2 பெண்கள் என 4 பேரும் நீரில் குதித்து மூழ்கினர்.

அங்கு குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள், உடனே 2 பெண்கள் மற்றும் சிறுவனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இருப்பினும் நீரில் மூழ்கியதால், மூவரும் இறந்த நிலையில் மீட்கப்பட்டன. கைக்குழந்தை மட்டும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மூவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரிக்கையில் கல்லணை கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டவர்கள் தனது மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகள் என தங்கராஜ் என்பவர் தாலுகா போலீசில் தகவல் தெரிவித்தார்.

   

இவர் கூறிய தகவலின்படி தற்கொலை செய்து கொண்டவர்கள் ராஜேஸ்வரி (30), அவரது மகன் ஹரிஷ் (6), ராஜேஸ்வரியின் தங்கை துர்கா தேவி (28), துர்கா தேவியின் 10 நாள் குழந்தை என தெரிய வந்தது. ராஜேஸ்வரியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால் தற்பொழுது ராஜேஸ்வரி அவருடன் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இவரது தங்கை துர்கா தேவி, கார்த்திக் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இருப்பினும் துர்கா தேவிக்கும் அவர் கணவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததால், கர்ப்பிணியான துர்கா தேவி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு பத்து நாட்கள் முன்புதான் குழந்தை பிறந்தது மேலும் தங்களின் வாழ்க்கை சரியாக அமையவில்லை என அடிக்கடி ராஜேஸ்வரி, துர்கா தேவி புலம்பி வந்துள்ளனர். இந்நிலையில் மனம் உடைந்த ராஜேஸ்வரியும், துர்கா தேவியும் தங்கள் குழந்தைகளுடன் கல்லணையில் குதித்து தற்கொலை செய்ததாக தெரிய வந்தது.