ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான திருநங்கை நடிகை ஒருவர் விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். வில்லிவாக்கத்தை சேர்ந்த அந்த நடிகை நாஞ்சில் விஜயன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக நானும் நாஞ்சில் விஜயனும் பழகி வந்தோம். அவர் திருமணத்திற்கு முன்னதாகவே என்னுடன் பழகி பிறகு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
View this post on Instagram
கடந்த ஆறு மாத காலமாக என் செல்போன் எண்ணை பிளாக் செய்து என்னுடன் பேச மறுக்கின்றார். அவர் என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு தற்போது கைவிட்டு செல்ல முயற்சிக்கின்றார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த திருநங்கை நடிகை புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக நாஞ்சில் விஜயன் தரப்பு கூறுகையில், புகார் அளித்த பெண் எனக்கு யார் என்று தெரியாது என கூறியுள்ளார். இந்நிலையில் இவர் மாதம்பட்டி ரங்கராஜ் பாணியில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” நம்மை காயப்படுத்த நினைப்பவர்களுக்கு நாம் கொடுக்கும் பதில் நம்முடைய சிரிப்பாக தான் இருக்க வேண்டும். ஒய் பொண்டாட்டி யாரு என்ன சொன்னாலும் நீ நம்பாத. நம்ம குழந்தையை நல்லா பாத்துக்கோ. நான் சாப்பிட்டு ஷூட்டிங் கிளம்பிட்டேன்” என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
