பொதுவாக ஆண்டுக்கு குறைந்தபட்சம் எட்டு நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் விடுமுறை விடப்படும்.
அந்தவகையில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி மதுரை மாவட்டத்தில் நாளை (செப் 11) அனைத்து மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் செயல்படாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
