திருப்பூரைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ்(50). இவர் ஆதரவற்ற மாணவர்களுக்கு காப்பகம் ஒன்று நடத்தி வந்துள்ளார். பெற்றோர்களை இழந்த மாணவர்கள் தங்கி அரசுப்பள்ளியில் படித்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் வருடம் டிசம்பர் மாதம் அந்த காப்பகத்தில் தங்கி படித்த 14 வயது சிறுமி ஒருவருக்கு ஆண்ட்ரூஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த சிறுமி வீட்டிற்கு சென்று தன் தாயிடம் நடந்ததை கூறியுள்ளார்.
இதனால் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆண்ட்ரூசை கைது செய்துள்ளார்கள். இது தொடர்பாக மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்த நிலையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியாருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 10,000 அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டது.
