வாகன ஓட்டிகளே உஷார்… உங்க போனுக்கு இந்த மாதிரி லிங்க் வருதா?… மத்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு…!

By Nanthini on புரட்டாதி 9, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது ஒரு புதுவிதமான மோசடி நடைபெற்று வருவதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது சமூக வலைத்தளங்களில் வரும் ஃபோலி லிங்குகள், குறுந்தகவலான எஸ்எம்எஸ் மூலமாக வரும் லிங்குகள் ஆகியவற்றை கிளிக் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஓட்டுனர் உரிமம், புதிய வாகனங்கள் பதிவு, உரிமம் புதுப்பித்தல் என பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சேவைகளை பெற parivahan.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான டெஸ்ட் தவிர பெரும்பாலான சேவைகளை இணையதளம் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான கட்டணத்தையும் இணையதளம் மூலமாக மட்டுமே செலுத்தலாம்.

   

ஆனால் சமீப காலமாக ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பு, வாகன பதிவு ஆகியவற்றுக்கு கட்டணம் செலுத்தலாம் என்று கூறி வாடிக்கையாளர்களுக்கு whatsapp மற்றும் எஸ்எம்எஸ் மூலமாக ஓரிரு எழுத்துக்கள் மாற்றப்பட்ட லிங்குகள் அனுப்பி பணம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு போன்ற சேவைகளை பெறுவதற்கு அதிகாரபூர்வ இணையதளம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மோசடியில் ஈடுபட சமூக வலைத்தளங்கள் மூலமாக அனுப்பப்படும் லிங்குகளை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் வேறு செயலியையும் பயன்படுத்த வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.