கொடூரத்தின் உச்சம்..! பசு மாட்டின் வயிற்றில் இருந்த 40 கிலோ பிளாஸ்டிக்… அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்..!!

By Soundarya on புரட்டாதி 9, 2025

Spread the love

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் தெருவில் சுற்றித்திரிந்த பசு மாடு ஒன்று கடந்த இரண்டு நாட்களாக உணவு ஏதும் சாப்பிடாமல் அப்படியே படுத்து கத்திக் கொண்டிருந்தது .அதன் வயிறு வீக்கத்தோடு இருந்தது. இதனை  அறிந்த கால்நடை மருத்துவர்கள் மாட்டை பரிசோதனை அளித்த போது அதன் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து பசுவின் வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு 40 கிலோ எடையுள்ள பாலிதீன் பைகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை கால்நடை மருத்துவர்கள் அகற்றி உள்ளார்கள். சுமார் 3 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடந்துள்ளது. தற்போது அந்த மாட்டின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஒரு வாரம் மருத்துவமனையில் கண்காணிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.