தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தங்கள் ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளது. இவர்களுக்கு நடுவே மக்களுக்கு புதிய விடியலை தரப்போகிறேன் என்று நடிகர் விஜய் களத்தில் இறங்கியுள்ளார். சமீபத்தில் TVK இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் திமுக தான் தங்களுக்கு ஒரே எதிரி எனவும் விஜய் கூறியிருந்தார். தற்போது முழுமையாக விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அருண்ராஜ் கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் நியமிக்கப்பட்டார். பாஜகவின் காண்டாக்டுகளை வைத்திருக்கும் இவர் TVK கட்சியின் ஒவ்வொரு நகர்வையும் உடனுக்குடன் பாஜகவுக்கு தெரிவித்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் விஜய் கட்சியை அதிமுக கூட்டணியில் இணைக்க ஈபிஎஸ்ஐ அவர் ரகசியமாக சந்தித்ததாக கூறப்படும் தகவல்கள் பனையூரை பதர வைத்துள்ளது.
