கோபத்தில் ஆபத்தானவர்களாக மாறும் ராசிகள்.. கொஞ்சம் உஷாரா தான் இருக்கணும்… இதுல உங்க ராசி இருக்கா.??

By Divyamayakannan on புரட்டாதி 9, 2025

Spread the love

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரத்தை வைத்து அவர்களுடைய வாழ்க்கையை தீர்மானிப்பார்கள். அதாவது எதிர்காலம், நிதி நிலைமை, காதல், கல்வி, செல்வம், எதிர்மறை மற்றும் நேர்மறை குணங்களில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகிறது. அதன் அடிப்படையில் சில ராசிக்காரர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள் மற்றும் அவர்களுடைய கோபம் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

ரிஷபம்: ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மிகவும் பிடிவாத குணம் உடையவர்கள். எந்த ஒரு நிலைமையிலும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பார்கள். கண்முன் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் குணம் உடையவர்கள். ரிஷப ராசியில் உள்ள காலையானது மிகவும் கோபம் தன்மையுடையது தான். பொறுமையாக இருப்பார்கள் எனினும் கோபத்தின் உச்சரிக்கை சென்று விட்டாள் அவர்களை விட அதிக வெறுப்புணர்வு கொண்ட ராசிக்காரர்களை கிடையாது. பொறுமையுடன் இருக்கும் இந்த ரிஷப ராசிக்காரர்களின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள் மிகவும் ஆபத்தானது.

   

மிதுனம்: மிதுன ராசிகாரர்கள் இரட்டை இயல்புக்கு பெயர் கொண்டவர்கள். இவர்களுடைய கோபம் மிகவும் கொடூரமானது. பொதுவாகவே யாரிடமும் அவ்வளவு சீக்கிரம் நெருங்கி பழக மாட்டார்கள். அவர்களின் புத்திசாலித்தனத்தால் மற்றும் வார்த்தைகளால் மிகவும் கோபக்கார ஆபத்தான ராசி. இவர்களுடைய புத்திசாலம் தனமே இவர்களுக்கு மிகவும் வலியை கொடுக்கும், அதனால் ஆபத்தான முடிவெடுக்கும் காரணமாக அமையலாம்.

   

சிம்மம்: சிம்ம ராசிகாரர்கள் பொறுமை மற்றும் கவர்ச்சிக்கு பெயர் போனவர்கள். எவ்வளவுதான் பொறுமையாக இருந்தாலும் அவர்களுடன் ஈகோவை டச் செய்யும் போது எதிர்பாக்காத அளவுக்கு ஆபத்தானவர்களாக மாறுவார்கள். அவர்களை அவமானப்படுத்துவதும் மற்றும் புறக்கணிப்பதையும் அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். இந்த சூழலில் அவர்களுன் கோபம் மிகவும் ஆபத்தான விளைவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். கோபத்தில் இருக்கும் போது மிருகத்தை போல் செயல்படுவார்கள்.