திடீரென சீறிப்பாய்ந்த காளை…! ஷூட்டிங் ஸ்பாட்டில் காயமடைந்த நடிகர் அசோக்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

By Devi Ramu on புரட்டாதி 9, 2025

Spread the love

நடிகர் அசோக் முருகா, பிடிச்சிருக்கு, கோழி கூவுது, காதல் சொல்ல ஆசை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது சங்கிலி எழுதி இயக்கி அழகர் பிக்சர்ஸ் தயாரிக்கும் மஞ்சுவிரட்டு திரைப்படத்தில் அசோக் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக காளை சீறி பாய்ந்ததால் அசோக் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரது வயிற்றில் இருந்து மார்பு வரை காயம் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.