வயதான காலத்தில் பணம் நெருக்கடி இல்லாமல் வாழ மத்திய அரசின் “அடல்ட் பென்ஷன் யோஜனா திட்டம்” உங்களுக்கு பெரும் உதவியாக அமையும். இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால், உங்கள் ஓய்வுக்கு பிறகு மாதம் தோறும் ஒரு நிலையான பென்ஷன் கிடைக்கும். இதில் முதலீட்டை விட கிட்டத்தட்ட 9 மடங்கு அதிகம் லாபம் கிடைக்கும். 18 வயது முதல் 40 வயது குட்பட்ட யார் வேண்டுமானாலும், அடல்ட் பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம்.
இந்தத் திட்டத்தில் ஓய்வூதிய தொகை, முன்கூட்டியே நிர்ணயிக்கப்படும். அதாவது நீங்கள் மாதத்திற்கு ரூ. 1000 முதல் 5000 வரை பென்ஷன் வாங்குவதற்கான விருப்பங்கள், இந்த திட்டத்தில் உள்ளது. உதாரணமாக, நீங்கள் 30 வயதில் சேர்ந்து மாதம் தோறும் 5000 பென்ஷன் வாங்க விரும்பினால், அதற்காக மாதந்தோறும் ரூ. 577 செலுத்த வேண்டும். இதை நீங்கள்30 வருடங்கள் தொடர்ந்து செலுத்தி வந்தால், உங்கள் வயதான காலத்தில் ரூ. 5000 ஓய்வு ஊதியம் நிச்சயமாக கிடைக்கும். இந்தத் திட்டத்தில் இணைய விரும்பினால், அருகில் உள்ள வங்கி அல்லது தபால் நிலையத்திற்குச் சென்று, ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண் போன்ற தேவையான ஆவணங்களை கொடுத்து, இந்தத் திட்டத்தில் இணையலாம்.
