திடீர் திருப்பம்.. இரவோடு இரவாக முடிவை மாற்றிய செங்கோட்டையன்… அதிமுகவில் மீண்டும் பரபரப்பு…!

By Nanthini on புரட்டாதி 9, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுகவில் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து அதிரடியாக விலகி வருகிறார்கள். சமீபத்தில் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் இபிஎஸ் மீது நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் ஹரித்துவார் போகவே டெல்லி செல்வதாகவும் பாஜக தலைவர்களை சந்தித்து பேச போவதில்லை என்றும் தெரிவித்த செங்கோட்டையன் தனது முடிவை தடாலடியாக மாற்றியுள்ளார். டெல்லியில் முகாம் இட்டுள்ள செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்துள்ளார். அதில் அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக அவரிடம் செங்கோட்டையன் பேசி இருப்பதாக தகவல் வெளியாக்கியுள்ளது. இதனால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.