இனி ஆன்லைன்ல சாப்பாடு ஆர்டர் பண்றது ரொம்ப கஷ்டம்.. விலையை திடீரென்று உயர்த்திய zomato,swiggy.. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்..!!

By Divyamayakannan on புரட்டாதி 8, 2025

Spread the love

தற்போது இந்தியாவில் ஜிஎஸ்டியில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்தது தான். அதில் தற்போது zomato மற்றும் ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களும் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பலரும் தற்போது ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவதை விட அதிகமாக வீட்டில் இருந்து ஆர்டர் செய்து தான் சாப்பிடுகிறார்கள். சிலர் சமைக்க விருப்பம் இல்லாத நேரத்திலும் ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். ஜிஎஸ்டியில் மாற்றம் வந்துள்ளதால் தற்போது ஆர்டர் செய்து உணவிற்கும் சற்று அதிக செலவாகுமாம்.

வரும் 22 ஆம் தேதி முதல் உணவு டெலிவரிகளுக்கு ஒவ்வொரு முறையும் சுமார் இரண்டு முதல் மூன்று ரூபாய் வரை கூடுதலாகி உள்ளனர். உணவு டெலிவரி செயலிகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்க உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சமீப காலமாகவே ஆன்லைன் உணவு டெலிவரி சேவை அதிகமாக மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

   

காலை, மதியம், இரவு ஏன் நள்ளிரவில் கூட விருப்பமான உணவை ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். zomato தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ. 10தில் இருந்து 12 ரூபாயாக உயர்த்தி உள்ளது. ஸ்விக்கி நிறுவனம் 12 ரூபாயிலிருந்து 14 ரூபாயாக கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். வழக்கமாகவே பண்டிகை காலகட்டத்தில் ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஜிஎஸ்டி மீது பழி சுமத்தி கட்டணத்தை உயர்த்தி வருகிறார்கள் என்று சில நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.