பணம், புகழ் வசதி வந்தாலும் திருடும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்காக 15 வருடமாக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருவதாக செயின் பறிப்பு வழக்கில் கைதான திமுகவை சேர்ந்த ஊராட்சி தலைவி வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னையை சேர்ந்தவர் வரலட்சுமி. இவர் காஞ்சிபுரத்தில் இருந்து அரசு பேருந்தில் சென்னை திரும்பிய போது ஐந்து சவரன் நகையை பெண் ஒருவர் திருடியுள்ளார். கோயம்பேடு போலீசார் இது குறித்து விசாரித்ததில் திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு ஊராட்சி தலைவரான திமுகவைச் சேர்ந்த பாரதி என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பல திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.
அதாவது ஓடும் பேருந்தில் பெண்களின் கவனத்தை திசை திருப்பி நகை திருடி உள்ளேன். நல்லவள் போல குழந்தைகளோடு நான் பேச்சு கொடுத்து நகை பறிப்பேன். கடந்த 15 வருடங்களாக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். திருடிய நகைகளை விற்று கிடைத்த பணத்தில் சொந்த ஊரில் வணிக வளாகம் ஒன்று கட்டியுள்ளேன். ஊராட்சித் தலைவர் ஆன பிறகு திருட்டு தொழிலை விடும்படி பலரும் கூறினார்கள். என்னால் அந்த பழக்கத்தை விட முடியவில்லை. பணம், பதவி, வசதி வந்த பிறகும் திருடும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்காக இந்த தொடரில் ஈடுபட்டு வருகிறேன்,. இனி திருடக்கூடாது என்று சபதம் எடுப்பேன். ஆனால் திருடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தோற்றுவிடுகிறேன். திருட்டுப்பழக்கத்தால் நான் கூனி குறுகி நிற்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறியுள்ளார்.
