துபாய் மற்றும் அபுதாபியில் நாளை முதல் 28ஆம் தேதி வரை 17 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 20 ஓவர் நடைபெறவுள்ளது. இந்திய அணி தொடருக்காக தயாராகிக் கொண்டு வருகின்றனர். துபாயில் உள்ள ஐசிசி மைதானத்தில் ப்ராக்டிஸ் செய்து வருகின்றனர். சூரியகுமார், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் , சுப்மன் கில் ஆகியோர் பயிற்சி முடிந்தவுடன் மைதானத்தை விட்டு வெளியேறினர். அப்போது அங்கு இருந்த சில ரசிகர்கள் சஞ்சு சாம்சன் என முழங்கினர். அப்போது சூரியகுமார் யாதவ் சாம்சனை உள்ளூர் பையன் என்று கலாய்த்தார். பிறகு சஞ்சுவிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
அப்போது அந்தப் பக்கம் வந்த சுப்மன் கில் ரசிகர்களை கண்டும் காணாமல் சென்றார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி சுப்மன் கில்லுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நாளை நடக்கும் போட்டியில் சுப்மன் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் தொடக்க வீரராக களம் இறங்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்வந்துள்ளது. விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய ஜித்தேஷ் ஷர்மாவும் அணியில் உள்ளார். சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெறுவாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
😂📸 | Gill’s face when the crowd goes
“SAAAM-SOOON! SAAAM-SOOON!”
Crowd love hits different when it’s for Sanju 💙👑#SanjuSamson #Gill #IndianCricket #FanLove pic.twitter.com/nl2Iuk96Zz
— CRICKET CULTURE (@CRICCULTURE09) September 7, 2025
