மல்லை சத்யா மதிமுகவிலிருந்து, நிரந்தரமாக நீக்கப்படுவதாக வைகோ அறிவித்துள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் மல்லை சத்ய செயல்பட்டு வருவதாக கடந்த மாதம் தற்காலிகமாக நீக்கப்பட்டு இருந்தார். இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இன்று நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். மதிமுகவில் 32 வருடங்களுக்கும்மேலாக இருந்த மல்லை சத்யா, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
