ஒடிசா மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வீடு திரும்பும் வழியில் காரில் வந்த ஒரு வாலிபர் லிப்ட் தருவதாக கூறி ஒன்பதாம் வகுப்பு மாணவியை கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கந்தம்மாள் மாவட்டம் தரிம்பாடி நவரில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவி தன்னுடைய அக்கா வீட்டுக்கு சென்றுள்ளார். பிறகு விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை காண மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். வீடு திரும்பும் வழியில் காரில் வந்த ஒரு வாலிபர் லிப்ட் தருவதாக கூறி அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால் சற்று நேரத்தில் காருக்குள் வைத்து அந்த மாணவியை கதற கதற அவர் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மாணவியிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த புகாரில் சிக்கியவர் திருமணமானவர் என தெரிய வந்துள்ள நிலையில் தலைமறைவான அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
