தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருந்த நடிகர் விஜய் தனது கடைசிதிரைப்படமான ஜனநாயகத்துடன் திரை உலகில் இருந்து விடைபெறுகிறார். மேலும் இவருடன் பல படங்களில் இணைந்து நடித்த திரிஷா, துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் குறித்து பேசி உள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
நேற்று துபாயில் சைமா விருது வழங்கும் விழா பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், இந்த விழாவில் 25 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்த நடிகை திரிஷாவிற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. அப்பொழுது திரிஷாவிடம் விஜயின் புகைப்படம் காட்டப்பட்ட பொழுது, ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதன் பின்னர் திரிஷா, “விஜய்யின் புதிய பயணத்திற்கு வாழ்த்துக்கள். அவரது கனவுகள் எதுவாக இருந்தாலும், அது நிச்சயம் நிறைவேறும். ஏனெனில் அவர் அதற்கு தகுதியானவர்” என்று கூறியுள்ளார்.
நடிகர் விஜய் குறித்து திரிஷா பேசிய இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல், சிவகார்த்திகேயன் இதை பார்த்து புன்னகைத்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
@trishtrashers mam wished @actorvijay sir for his Journey❤️🔥 #SIIMA2025
A beautiful moment of respect and admiration.#TrishaKrishnan #SouthQueen #Trisha #vijay #SIIMA pic.twitter.com/JLVepWx4Ht
— Trisha😻Sushma (@Trishkrish_583) September 7, 2025
