கட்சியிலிருந்து நீக்கவில்லை… திடீரென பல்டி அடித்த இபிஎஸ்… அதிமுகவின் கிளம்பும் புதிய பூகம்பம்…!

By Nanthini on புரட்டாதி 7, 2025

Spread the love

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்தது. இதனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் வாக்குவாதம் எழுந்த நிலையில் ஒரு கட்டத்தில் கட்சியிலிருந்து ஓபிஎஸ் முழுமையாக நீக்கப்பட்ட பொதுச் செயலாளர் பொறுப்பை இபிஎஸ் ஏற்று கொண்டார். இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகிய நிலையில் சமீபத்தில் 2026 தேர்தலுக்காக இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதன் வெளிப்பாடாக செங்கோட்டையன் பிரிந்து கிடக்கும் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என ஈபிஎஸ்-க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.

ஆனால் திடீரென ஆலோசனை நடத்தி செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்குவதாக இபிஎஸ் நேற்று அறிவித்தார். இது கட்சியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் செங்கோட்டையன் உள்ளிட்டோரை கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவித்த இபிஎஸ், ஏன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட பொறுப்புகளில் இருந்து நீக்கவில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. பொதுவாக கட்சிக்கு எதிராக செயல்பட்டால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் என்றே அதிமுக தலைமை அறிக்கை வெளியிடும். ஆனால் இந்த விவகாரத்தில் ஏன் இபிஎஸ் பின்வாங்குகின்றார் என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.