அடுத்த அதிர்ச்சி… தமிழகத்தில் உருவாகும் புதிய கூட்டணி… திடீர் பரபரப்பை கிளப்பிவிட்ட டிடிவி தினகரன்…!

By Nanthini on புரட்டாதி 7, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மூலமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நீங்கள் நினைக்காத ஒரு கூட்டணி அமைய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இது தொடர்பாக பேசிய அவர், ஓபிஎஸ், செங்கோட்டையன் மற்றும் நான் இணைந்து புதிய கூட்டணி அமைக்க உள்ளேன் என வெளியான செய்திக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது. ஆனால் நீங்கள் நினைக்காத ஒரு கூட்டணி அமைய வாய்ப்புள்ளது. நாங்கள் அமைக்கும் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும் எனக் கூறி புதிய பரபரப்பை கிளப்பி உள்ளார்.