டிடிவி தினகரன், OPS உடன் சமரசம் பேச தயார்… கூட்டணிக்கு மீண்டும் அழைப்பு..? நயினார் நாகேந்திரன் அதிரடி..!!

By Soundarya on புரட்டாதி 7, 2025

Spread the love

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் .  அப்போது, ” NDA கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரன், OPS உடன் சமரசம் பேச தயார். கூட்டணியில் மீண்டும் இணைவது குறித்து டிடிவி தினகரன், OPS உடன் சமரசம் பேச தயார். மேலும் அண்ணாமலை கூட்டணியை சரியாக கையாண்டதாக டிடிவி தினகரன் கூறியதற்கு பதிலளித்த அவர், அமித்ஷா முன்னிலையில் எடப்பாடியை முதல்வராக்க வேண்டும் என அண்ணாமலை பேசியதற்கு டிடிவி என்ன விளக்கம் அளிப்பார்?  கூட்டணியில் இருந்து அவர் வெளியேறியதற்கு, நான் பொறுப்பாக முடியாது. ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒன்றுபட வேண்டும். திமுக என்றுமே தொடர்ந்து ஆட்சி அமைத்தது கிடையாது என்றும் கூறியுள்ளார்.