பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள், தங்களின் உயர்கல்வி எளிதாக தொடர வேண்டும் என்பதற்காக, இந்திய ஆயுள் காப்பீடு கழகம்(LIC) ஒவ்வொரு வருடமும் கோல்டன் ஜூபிலி ஸ்காலர்ஷிப் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 40,000 வரை மாணவர்கள் நிதி உதவி பெறலாம். இந்த ஆண்டிற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது.
யார் விண்ணப்பிக்கலாம்?
- அரசு, தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் & ஐடிஐ நிலையங்களில் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பொது கல்வி உதவித்தொகை
- 12-ஆம் வகுப்பு / 10-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
- 2022-23 / 2023-24 / 2024-25 கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மருத்துவம்/ பொறியியல்/ கலை மற்றும் அறிவியல்/ டிப்ளமோ/ ஐடிஐ படிப்புகளில் இந்த ஆண்டு சேர்ந்திருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 4,50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பெண்களுக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை
- 10-ஆம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- 2022-23 / 2023-24 / 2024-25 கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- 11-ஆம் வகுப்பு / ஐடிஐ / டிப்ளமோ படிப்புகளில் சேர்ந்திருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 4.50 லட்சம்-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
உதவித்தொகை எவ்வளவு?
உதவித்தொகை மாணவர்களின் படிப்பைப் பொறுத்து மாறும்.
- மருத்துவ மாணவர்களுக்கு: ஆண்டுக்கு ரூ.40,000 (இரண்டு தவணைகளில் ரூ.20,000).
- பொறியியல் மாணவர்களுக்கு: ஆண்டுக்கு ரூ.30,000 (இரண்டு தவணைகளில் ரூ.15,000).
- பட்டப்படிப்பு, டிப்ளமோ மாணவர்களுக்கு: ஆண்டுக்கு ரூ.20,000 (இரண்டு தவணைகளில் ரூ.10,000).
- பெண்களுக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை : ஆண்டுக்கு ரூ.15,000.
தேவையான ஆவணங்கள்
- மாணவர்களின் வங்கிக் கணக்கு, IFSC எண், காசோலை
- வருமான சான்றிதழ்
- கல்வித்தகுதி சான்றிதழ்கள்
- ஆதார் எண்
- உயர்கல்வி சேர்க்கைக்கான சான்றிதழ்
விண்ணப்பிக்க கடைசி தேதி : செப்டம்பர் 22, 2025
எப்படி விண்ணப்பிப்பது ?
https://licindia.in/golden-jubilee-foundation என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
