முதுகலை பட்டதாரிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. உங்களுக்கும் மாதம் ரூ.12400 வேணுமா…. அப்போ உடனே அப்ளை பண்ணுங்க….!!

By Srimathi on புரட்டாதி 5, 2025

Spread the love

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE), பொரியல் பட்டதாரி திறனறித் தேர்வு (GATE) அல்லது வடிவமைப்புக்கான பொது நுழைவு தேர்வு (CEED) ஆகியவற்றின் ஸ்கோர் அடிப்படையில் தகுதியுள்ள மாணவர்களுக்கு முதுகலை உதவித்தொகையை [ME/M.Tech./M.Arch. (GATE-க்கு) மற்றும் M.Des. (CEED-க்கு)]வழங்கி வருகிறது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட முதுகலை படிப்புகளில் சேர விரும்பும் முழு நேர மாணவர்களுக்கு, இந்த உதவித்தொகை கிடைக்கும்.

நிதி உதவி : மாதத்திற்கு ரூ. 12,400. இந்த உதவித்தொகை 24 மாதங்களுக்கு வழங்கப்படும்.

   

தகுதி

   
  • GATE /CEED மதிப்பெண் பொருத்து AICTE அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் முழு நேர மாணவராக இருத்தல் வேண்டும்.
  • ஆதார்- சீட் சேமிப்பு கணக்கு வைத்திருத்தல் வேண்டும்
  • பிற நிதி உதவி பெறாது/வெளிநாட்டு நிதியுதவி பெற்று / மேலாண்மை ஒதுக்கீட்டு மாணவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

 

AICTE PG இன் அதிகார ப் பூர்வ இணையதளத்திற்குச் சென்று மாணவர்கள் தங்கள் சுய விவரங்களை பதிவேற்றி இந்தத் திட்டத்திற்கு அப்ளை செய்யலாம்.

உதவித்தொகை புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு

  • உதவித்தொகையைத் தொடர்ந்து பெற மாணவர்கள் குறைந்தபட்சம் 75 சதவீதம் வருகை பதிவு வைத்திருக்க வேண்டும்
  • மேலும் திருப்திகரமான கல்வி திறனையும் பராமரிக்க வேண்டும்
  • அவர்கள் வேலையில் சேர தடை விதித்துள்ளது
  • தவறான நடத்தையும் தவிர்க்க வேண்டும்