தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என நான்குமுனை போட்டியாக 2026 தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணியோ இன்னும் நான்கு மாசம் தான், பொறுப்பேத்துக்கோங்க, பிறகு நம்ம ஆட்சி தான், நீங்க எதிர்பார்க்கும் கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் புதிய கூட்டணி உருவாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்தடுத்து கூட்டணி அறிவிப்புகள் வெளியாகும் நிலையில் யார் வெற்றிவாகை சூடப் போகிறார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவே உள்ளது.
