ராஜஸ்தானை சேர்ந்த கிருத்திகா மீனா (26) என்ற பெண்ணின் சுயவிவர குறிப்பேடு பெரும் பேசும் பொருளாக மாறி உள்ளது. அதில் அவருடைய புகைப்படத்துடன், அவர் முதுகலை பட்டம் பெற்றவர் என்றும், தையல் மற்றும் நடனம் மீது ஆர்வம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருடைய தந்தை கடை வைத்து நடத்துவதால், தானும் தற்பொழுது அதை பராமரித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், மணப்பெண்ணின் வித்தியாசமான நிபந்தனைகள் தான்.
பொதுவாக திருமணத்திற்கு மணமகனின் பொருளாதார வசதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். ஆனால் கிருத்திகா வைத்த நிபந்தனையில், மணமகன் ஏழையாக இருந்தாலும் சரி, ஆனால் எந்த ஒரு போதை பழக்கமும் இருக்கக் கூடாது. இனியும் உபயோகிக்க கூடாது, என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சாதிக்கு முன்னுரிமை இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த பயோடேட்டா இணையதளத்தில் நூற்றுக்கணக்கான விருப்பங்களை பெற்றுள்ளது. சமூக ஊடகங்களில் நேர்மறையான விமர்சனங்களுடன் எதிர்மறையான விமர்சனங்களும் இந்த மணப்பெண் பயோடேட்டா விற்கு வந்துள்ளது.
