ஐ.பெரியசாமிக்கு சிக்கல்..! ஐயா நாங்க கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க… லிஸ்ட் போட்ட TVK… போஸ்டரால் பெரும் பரபரப்பு..!!

By Divyamayakannan on புரட்டாதி 4, 2025

Spread the love

தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தயாராகிக் கொண்டு வருகின்றனர். தவெக தலைவர் விஜய் கேள்வி கேட்டது போல அமைச்சர் ஐ.பெரியசாமியை ஆத்தூர் தொகுதி தாவேக நிர்வாகிகள் கேள்வி கேட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் தொகுதியில் உள்ள ஊராட்சி சாலை மற்றும் சாக்கடை, பாலங்கள் என அனைத்தையும் புதுப்பிப்பதற்காக டிரெண்டர் ஒப்பந்தம் போட்டிருந்தது.

ஒப்பந்தக்காரர்கள் அரசு மக்கள் நலனுக்காக ஒதுக்கிய நிதியை ஊழல் செய்த இன்றுவரை எந்த ஒரு பணியையும் தொடங்கவில்லை. சில பகுதிகளில் தரமற்ற சாலை பாலம் அமைத்துள்ளனர். இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்திருந்தும் அமைச்சர் ஐ.பெரியசாமி இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பொதுமக்கள் தாவேக ஆத்தூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகளிடம் இந்த பிரச்சனையை கொண்டு சென்று உள்ளனர். ஆத்தூர் சின்னாளப்பட்டி பேரூராட்சி பகுதியில் தவெக தலைவர் விஜய், ஐ.பெரியசாமி இடம் கேள்வி கேட்டது போல போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.