உயிர் போகும் நிலையில் இருந்த மாணவி… Meta கொடுத்த அலர்ட்… 16 நிமிடங்களில் உயிரைக் காப்பாற்றிய போலீஸ்… திக் திக் நிமிடங்கள்…!

By Nanthini on புரட்டாதி 4, 2025

Spread the love

உத்திரபிரதேச மாநிலத்தில் தற்கொலைக்கும் இயன்ற கல்லூரி மாணவி மெட்டா நிறுவனத்தின் அலர்ட் மூலம் காப்பாற்றப்பட்ட சம்பவம் நெகிழ வைத்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் பறையழி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி இளைஞர் ஒருவரை instagram மூலம் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளைஞர் திடீரென்று மாணவியின் தொடர்பை துண்டித்த நிலையில் இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பூச்சிக்கொல்லி மருந்தையும் தற்கொலை குறிப்பையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மாணவியின் தற்கொலை குறிப்பு குறித்து உள்ளூர் காவல் நிலையத்திற்கு மெட்டா நிறுவனம் alert விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து போலீசார் 16 நிமிடத்தில் அந்த மாணவியின் இருப்பிடத்திற்கு சென்று பூச்சி மருந்து குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது மாணவி உடல்நிலை நன்றாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தற்கொலை தொடர்பான பதிவு செய்யப்பட்டால் அது தொடர்பாக alert பெறுவதற்காக 2022 முதல் மெட்டாவுடன் உத்தரப்பிரதேச காவல்துறை ஒரு ஏற்பாட்டை கொண்டுள்ளது. இதன் மூலம் ஜனவரி முதல் மாநிலத்தில் சுமார் 135 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது