மிலாடி நபி விடுமுறை.. இன்று முதல் தமிழக அரசு ஸ்பெஷல் அறிவிப்பு….!

By Nanthini on புரட்டாதி 3, 2025

Spread the love

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் மக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக அரசு தரப்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது மிலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு உள்ளிட்ட ஊர்களுக்கு இன்று முதல் ஐந்தாம் தேதி வரை 1475 க்கும் அதிகமான பேருந்துகளும், ஏழாம் தேதி பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர 875 பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் குறிப்பிட்டுள்ளது.