கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்த செல்வமணி (72), ஐ.டி.ஐ, எம்.காம் மற்றும் எம்.பி.ஏ, படித்துள்ளாராம். இவர் கிட்டத்தட்ட 37 ஆண்டுகளாக நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து 10 ஆண்டுகளாக ஓய்வில் உள்ளார். ஓய்வுக்குப் பிறகு வீட்டில் இருக்க பிடிக்காமல் படிப்பின் மீது உள்ள ஆசையினாள் தற்போது மயிலாடுதுறையில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பித்து, நிர்வாகம் ஒப்புக்கொண்டதால் படித்து வருகிறார்.
இரண்டாம் ஆண்டு டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிக்கிறாராம். தினமும் இவர் படிப்பதற்காக சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் பேருந்து மற்றும் ரயில் என மாறி மாறி பயணத்து கல்லூரிக்கு சென்று படித்து வருகிறாராம். வடலூரில் மனைவியுடன் வசித்து வருகிறார். மனைவிக்கு உடல்நலம் சரியில்லாததால் வீட்டில் அனைத்து வேலையும் செய்துவிட்டு மனைவிக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து விட்டு. பின்னர் புத்தகம், லஞ்ச் பேக் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஒன்பது மணிக்கு எல்லாம் கல்லூரிக்கு வந்து விடுவாராம்.
அந்தக் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களும் இவருடைய சுறுசுறுப்பை பார்த்து தாத்தா, தாத்தா என்று அன்போடு அழைக்கிறார்களாம். அவருடைய அனுபவத்தை பற்றி கேட்டபோது மாணவர்கள் சகஜமாக பேசி பழகுவது மற்றும் படிப்பு அனைத்துமே நன்றாக போய்க் கொண்டிருக்கிறது, அவரகளிடம் இருந்து நான் நிறையவே கற்றுக் கொள்கிறேன் என்றும் கூறினாராம். கல்லூரி முடிந்தவுடன் மாலை 5 மணிக்கு எல்லாம் வீட்டிற்கு சென்று விடுவாராம். இளம் வயதிலேயே எவ்வளவோ மனிதர்கள் சோம்பேரி தனமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம் நாட்டில் 72 வயதில் கல்லூரிக்குச் சென்று படிக்கின்றார் செல்வமணி. இளைஞர்களுக்கு செல்வமணி தாத்தா உதாரணமாக இருக்கிறார்.
