இல்லத்தரசிகளே குட் நியூஸ்.. இந்த பொருட்களுக்கெல்லாம் விலை குறைய போகுது.. ஒன்றிய அரசு அதிரடி..!

By Divyamayakannan on புரட்டாதி 3, 2025

Spread the love

மத்திய அரசு ஜிஎஸ்டியை 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என இரண்டு அடுகளாக குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. 12 சதவீதத்தில் உள்ள பொருட்களை ஐந்து சதவீத வரி அடுக்கிலும், 28 சதவீத வரி அடுக்கில் உள்ள பொருட்களை 18 சதவீத அடிக்கணும் மாற்ற உள்ளதாக கூறியுள்ளனர். நாம் தினமும் உபயோகிக்கும் பொருட்களின் விலை குறையும் என கருதப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று மற்றும் நாளை ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டம் நடக்க உள்ளது.

நெய், குடிநீர், பானங்கள், தின்பண்டங்கள், காலணிகள், ஆடைகள், மருந்துகள் மற்றும் மருத்துவ கருவிகள் ஆகிய பொருள்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீத வரியை மாற்ற உள்ளனர். பென்சில், சைக்கிள், குடை இது போன்ற பொருட்களுக்கு ஐந்து சதவீதமாக மாற உள்ளது. டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் ஆகிய பொருட்களுக்கு 28 இல் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படும். விலை குறைந்த கார்களை 18% ஜிஎஸ்டி என்று குறைக்க உள்ளார்கள். புகையிலை. பான் மசாலா. சிகரெட் போன்ற பொருட்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. முட்டை. பால், தயிர், உப்பு போன்ற உணவுப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை மற்றும் தேன் இருக்கு 5 சதவீதம். சோப்பு, தேங்காய், எண்ணெய், ஐஸ்கிரீம், போன்ற பொருட்களுக்கு 18 சதவீதம்.