தமிழ்நாடு வருகின்ற 2026 ஆம் ஆண்டு வரப் போகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தயாராகிக் கொண்டு வருகின்றனர். அனைத்துக் கட்சியினரும் பிரச்சாரம் நடத்தியும் வருகின்றனர். வேலூர் பஸ் நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தின் போது பேசியது. தொடர்ந்து விவசாயிகளுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு. டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தைக் கொண்டு வந்தவர் தானே. தடுப்புகளை நிறுத்தி விவசாயிகளுக்கு வேளாண் மண்டலமாக சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தது தான் அதிமுக அரசு.
இந்தியாவின் கூட்டணி வெற்றி பெருமைக்காக பேசுகிறார் முதலமைச்சர் 152 அடி உயர்த்தும் நடவடிக்கையை கம்யூனிஸ்ட் அரசிடம் பேசி முடிவெடுங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறோம். மக்களைப் பற்றி திமுகவுக்கு என்ன கவலை மக்களுக்காக எதையும் செய்ய மாட்டார்கள் குடும்பத்துக்காக எல்லாத்தையும் செய்வார்கள். வங்கியிலிருந்து இதுவரை பயிர் கடனை அதிமுக அரசு இரண்டு முறை தள்ளுபடி செய்துள்ளது. ரூ.12,100 கோடி தள்ளுபடி செய்துள்ளோம். அதிமுக பதவிக்கு வந்தால் 4000 திறக்கப்பட உள்ளோம். அதிமுக திட்டத்தை ரத்து செய்வதே திமுகவின் சாதனை.
