பிறந்த குழந்தையின் கைகளை கடித்த எலிகள்… மருத்துவமனையில் இருந்து வெளியான ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 2, 2025

Spread the love

மத்திய பிரதேசம் மாநிலம் இந்து ஊரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை NICU பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு குழந்தையை எலி கடித்தது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அதற்கு மறுநாள் திங்கட்கிழமை மற்றொரு குழந்தையும் இதே போன்று எலி தாக்குதல் சம்பவத்திற்கு உள்ளானது. இதனால் மருத்துவமனையின் சுகாதார நிலமை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. அதேசமயம் அந்த பகுதியில் எலிகள் நடமாட்டம் நீண்ட நாட்களாகவே இருந்து வந்ததாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர். ஒரு பெரிய எலி தொடர்ந்து அங்கு சுற்றி திரிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த செயல் மருத்துவமனையின் சுகாதார நடவடிக்கைகள் மிக மோசமாக உள்ளதை வெளிப்படுத்துகின்றது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தற்போது தனிப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தலைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வார்டுகளுக்குள் உறவினர்கள் உணவுப் பொருட்களை கொண்டு வருவதால் எலிகள் அதிகரித்துள்ளதாகவும், மருத்துவமனையில் பூச்சி கட்டுப்பாட்டு பணிகள் இறுதியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் மருத்துவமனைகளில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வளவு முக்கியமானவை என்பதை காட்டுகின்றது. தற்போது அது தொடர்பான ஒரு வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.