தீபாவளி பரிசு… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!

By Nanthini on புரட்டாதி 2, 2025

Spread the love

மத்திய அரசின் புள்ளியியல் துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள நுகர்வு பொருட்களின் விலைவாசியை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதமும் விலை குறியீட்டு எண்ணை கணக்கிடுவர். இதன் அடிப்படையில் தீபாவளிக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 55 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக மூன்று சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதில் ஜூலை 1 முதல் கணக்கிட்டு நிலுவைத் தொகையாக வழங்கப்படும். ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தின் அகவிலைப்படி தீபாவளிக்கு முன்பாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதே போல தமிழக அரசும் அகவிலை படியை 3 % உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.