கூட்டணியில் வெடித்தது சர்ச்சை..! வழக்கத்தை மாற்றிய EPS… அதிருப்தியில் பாஜக தலைவர்கள்..!!

By Soundarya on புரட்டாதி 2, 2025

Spread the love

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் இடையே அதிகாரப் போட்டி நடந்து வருகிறது. இதனால் கட்சியின் உட்கட்சி பூசல் ஏற்பட்டதை தொடர்ந்து அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். இது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பு ஒரு அணியாகவும்,இபிஎஸ் தரப்பு ஒரு அணியாகவும் இருந்து வருகிறார்கள். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று நிர்வாகிகள் முயற்சி எடுத்தும் நடக்கவில்லை.

இந்த நிலையில்  நேற்று மதுரையில் நடந்த பரப்புரையல்  பாஜக முக்கிய தலைவர்களை எடப்பாடி  புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதுவரை நடந்த கூட்டங்களில் அந்தந்த ஊர்களின் முக்கிய கூட்டணி கட்சியினரை தன்னோடு நிற்கவைத்து பேசுவது வழக்கம். ஆனால், நேற்று ராம.சீனிவாசன் உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்களை பிரசார வாகனத்தில் எடப்பாடி  ஏற்றவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த அவர்கள்,  எடப்பாடி பழனிச்சாமி பேசி முடிப்பதற்கு அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளனர்.