போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் மூலம் நிலையான வருமானம் கிடைக்கிறது. போஸ்ட் ஆபீஸ் முக்கிய திட்டங்களில் ஒன்று தபால் அலுவலக நேர வைப்பு திட்டம்(TD). இந்த திட்டத்தில் பணத்தை டெபாசிட் செய்தால் வட்டி கிடைக்கும். நிலையான வருமானம் பெற்று, பணத்தை பாதுகாப்பாக வைக்க ஆசைப்படும் நபர்களுக்கு இது சிறந்த திட்டம்.
தபால் அலுவலக நேர வைப்பு திட்டத்தில் காலாண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் வருடத்திற்கு ஒருமுறை பணம் செலுத்தினால் போதும். இந்த திட்டத்தில் 1,2,3 அல்லது 5 ஆண்டுகள் கால அவகாச திட்டத்தை தேர்வு செய்யலாம். இதில் 5 ஆண்டு திட்டம் தேர்வு செய்தால் 80C-ன் கீழ் வருமான வரி விலக்கு கிடைக்கும்.
இந்த திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு 6.9% வட்டி, 2 ஆண்டுக்கு 7% வட்டி 3 ஆண்டுக்கு 7.1% வட்டி கிடைக்கும். ஐந்து ஆண்டுக்கு இந்த திட்டத்தில் அதிகபட்ச வட்டி 7.5% கிடைக்கும். ஐந்தாண்டு திட்டத்தில் கூட்டு வட்டி பயன்படுத்தப்படுவதால் முதலீடு காலப்போக்கில் வேகமாக உயரும்.
உதாரணமாக ஐந்து ஆண்டுகளுக்கு 5 லட்ச ரூபாயை 7.5 சதவீத வட்டி விகிதத்தில் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளுக்கு பிறகு அதன் மொத்த மதிப்பு 7.21 லட்சம் ஆக இருக்கும். அந்த பணத்தை மீண்டும் ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் அதன் மொத்த மதிப்பு 10.40 லட்சமாக இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் 5 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் அடுத்த 10 ஆண்டுகளில் அது 10 லட்சமாக அதிகரிக்கும் என்பதுதான் சிறப்பு.
