கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் பெட்டதபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமி தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அந்த சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் அவருடைய தாய் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி எட்டு மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் கதறி அழுதுள்ளார். பிறகே சிறுமியிடம் அவருடைய தாயும் மருத்துவர்களும் விசாரணை நடத்திய போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையான கதையை கண்ணீருடன் கூறியுள்ளார்.
அதனைக் கேட்டு மருத்துவர்களும் சிறுமியின் தாயும் ஆக்ரோஷம் அடைந்துள்ளனர். ஏனென்றால் அந்த சிறுமியை அவளுடைய தந்தையே கடந்த ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இது குறித்து மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சிறுமியிடம் விசாரணை நடத்திய போலீசார் சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
