அண்டை நாடான ஆப்கானிஸ்தானின் நகங்கர் மாகாணத்தில் நள்ளிரவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த பயங்கர சம்பவத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பலரும், இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்கள். ஏற்கெனவே தீவிரவாதம், பொருளாதார சிக்கல் போன்றவற்றில் மாட்டிக்கொண்டு தவித்து வரும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்த பேரழிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அதிகாலை 12.47 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் ஜலாலாபாத்திற்கு வடகிழக்கே 27 கிமீ (16.77 மைல்) தொலைவில், நங்கர்ஹார் மாகாணத்தில், 8 கிமீ (4.97 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக USGS தெரிவித்தது.
