தலையே சுத்துதே.. 1 ஆம் வகுப்புக்கு 7.35 லட்சம், 11thக்கு 11 லட்சம்.. பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி கட்டணம்..!!

By Divyamayakannan on புரட்டாதி 1, 2025

Spread the love

பெங்களூர் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கருத்துகளை பதிவிட்டு வருவார். பெங்களூரில் ஒரு சர்வதேச பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.7.35 லட்சம் ஒரு ஆண்டுக்கு வசூலிக்கிறார்களாம். தற்போது புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை ஆண்டுக்கு ரூபாய் 7.35 லட்சம்  மற்றும்  பிளஸ் டூ மாணவர்களுக்கு 11 லட்சம் வசூலிக்கிறார்களாம். பள்ளியின் அப்ளிகேஷன் ஃபார்ம் க்கு ஆயிரம் ரூபாயும், அட்மிஷனுக்கு ஒரு லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். முக்கியமான விஷயம் அட்மிஷன் தொகையை திருப்பி தர மாட்டார்களாம். பள்ளிக் கல்விகட்டண அட்டவணை இணையதளத்தில் பரவி வருகிறது மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெருமைக்காக எருமை மேற்பது போல பெற்றோர்களாலே இது போன்ற அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றன.