தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். “2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஒரு அணி அமையும். மேலும் திமுக என்.டி.ஏ., அணி ஏற்கனவே உள்ளது. அதை போல் சீமான் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும் விஜய் தலைமையிலும் ஒரு அணியாமையும்” என்று கூறினார்.
இதனை அடுத்து, என்.டி.ஏ கூட்டணியில் நீங்கள் இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்ட பொழுது, என்.டி.ஏ.,வில் நான் இருக்கிறேனா, இல்லையா? என்பதற்கு நாயினார் நாகேந்திரன் தான் பதில் சொல்ல வேண்டும். நாங்கள் பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு வழங்குவோம் என்று டிடிவி தினகரன் பேசினார்.
