தமிழகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்பட்ட நிலையில் பல இடங்களிலும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்து போலீசார் பாதுகாப்புடன் ஆற்றில் கரைத்து வருகின்றன.அதன்படி சென்னையில் இன்று 1500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நான்கு இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட உள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வினோதமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
அதாவது தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தீ நடனம் என்ற பெயரில் நடைபெற்ற சம்பவத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சின்ன குழந்தைகள் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்த நிலையில் அது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
