உயிருக்கு உயிரான காதல்… சின்ன சண்டைக்காக வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்… தகராறு செய்த காதலிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

By Srimathi on ஆவணி 31, 2025

Spread the love

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பெண், பக்தி ஜிதேந்திர மாயேகர் (26). இவர் கடந்த 17 ஆம் ஆண்டு தனது நண்பரை சந்திப்பதாக கூறிவிட்டு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், அதிர்ச்சி அடைந்த பெண்ணின் குடும்பத்தினர், அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தனர். மயோகரின் தோழிகளிடம் அவரைப் பற்றி விசாரித்த போதும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என்பதால், மயோகரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில், போலீசார் மயோகரின் மொபைல் சிக்னலை வைத்து தேடியதில், அவர் கடைசியாக இருந்த கண்டாலா பகுதியை காட்டியது.

மேலும் விசாரிக்கையில், மயோகர் துர்வாஸ் தர்ஷன்பாட்டீல் என்பவரை காதலித்து வந்ததாக தெரிய வந்தது. மேலும் துர்வாசை பிடித்து விசாரித்த பொழுது, மயோகரை கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். மேலும் துர்வாஸ், மயோகர் இருவரும் காதலித்து வந்த நிலையில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பின் துர்வாஸ் வேறொரு பெண்ணை திருமணமும் செய்துள்ளார். இதனை அறிந்த மயோகர், ஆத்திரமடைந்து இது தொடர்பாக தனது காதலன் துர்வாஸிடன் தகராறு செய்துள்ளார். அப்பொழுது ஆத்திரம் அடைந்த துர்வாஸ் மயோகரை அடித்துக் கொலை செய்துள்ளார். பின் தனது கூட்டாளிகளானவிஸ்வாஸ் விஜய் பவார், சுசாந்த் சாந்தாராம் நரால்கர் சேர்ந்து மயோகரின் உடலை சாக்கடையில் வீசி உள்ளனர். மேலும் போலீசார் மயோகரின் உடலை கைப்பற்றி அவரது காதலன் துர்வாஸ் மற்றும் அவர் கூட்டாளிகளை கைது செய்துள்ளனர்.