பிரபல நடிகரான அஜித் நடிப்பில் கடந்த 1998-ஆம் ஆண்டு காதல் மன்னன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் எம்.எஸ் விஸ்வநாதன், விவேக், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகை மானு ஹீரோயினாக நடித்துள்ளார். இதுதான் அவருக்கு முதல் திரைப்படம். அதன் பிறகு அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.
ஒரு பேட்டியில் மானு கூறியதாவது, நான் படிப்பதற்காக தான் சென்னை வந்தேன். பள்ளி படிக்கும் போது காதல் மன்னன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விவேக் மற்றும் இயக்குனர் சரண் என்னை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார்கள். அதன்பிறகு படிப்பு தான் முக்கியம் என நினைத்ததால் நான் நடிக்கவில்லை.
நான் எதையும் தியாகம் செய்யவே இல்லை. தாமதமாக தான் திருமணம் செய்தேன். எனக்கு பிடித்த நடனத்தை கற்று கொண்டேன். அதன் பிறகும் என் வாழ்க்கை எனக்கு பிடித்த மாதிரி தான் அமைந்தது. அந்த வயதில் நான் எந்த தியாகமும் செய்யவில்லை என கூறியுள்ளார்.
