சீனாவில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மர்ம நபர் ஒருவர் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பெண்ணிற்கே தெரியாமல் இரத்தத்தை எடுக்க முயற்சித்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தநிலையில் இப்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சீனாவை சேர்ந்த லீ என்ற நபர் பெண்ணின் வீட்டிற்குள் திருட்டுத்தனமாக நுழைந்து. மயக்கம் மருந்து தடவிய துணியை பெண்ணின் மூக்கில் வைத்து மயக்கம் அடையச் செய்துவிட்டு அப்பெண்ணின் இரத்தத்தை ஊசி மூலமாக எடுத்து உள்ளார்.
அப்பொழுது திடீரென்று பெண்ணின் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். இரத்தத்தை திருடிய நபரை அடித்து துரத்தி போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். நபர் செய்த தவறை நியாயப்படுத்தி பேசி இது போன்ற வீடுகளில் புகுந்து குற்றங்களை செய்தால் நான் மன நிம்மதியாக இருக்கிறேன் என்று வாதாடிவுள்ளார். வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததால் அந்த நபருக்கு இரண்டு ஆண்டு சிறந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
