பயனர்களே, உடனே அப்டேட் பண்ணுங்க…. WhatsAppல் வந்த அசத்தல் அப்டேட்.. யூஸ் பண்ணிக்கோங்க…!

By Nanthini on ஆவணி 30, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் தங்களுக்கு பிடித்தவர்களுடன் உரையாடுவதற்கே பெரும்பாலும் whatsapp செயலியை தான் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு whatsappபில் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி whatsapp தங்களது பயனர்களுக்காக AI Writing help என்ற புது அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உதவியுடன் நீங்கள் அனுப்ப நினைக்கும் மெசேஜை மேலும் மெருகேற்றிக் கொள்ளலாம். ஒரு மெசேஜ் professional ஆக வேண்டுமா அல்லது நண்பர்களுக்கு அனுப்ப casual ஆனதாக இருக்க வேண்டுமா என்பதை தீர்மானிப்பது AI- க்கு command கொடுத்தால் போதும். அதுவே மெசேஜை அழகாக மாற்றி கொடுத்து விடுகிறது.