உத்திர பிரதேச மாநிலம் ஜலால்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரீத்தா(25). கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ரீத்தா சைலேந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு காச நோயால் பாதிக்கப்பட்ட ரீத்தா டெல்லியில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் காசநோயிலிருந்து மீண்ட ரீத்தா மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ சென்றபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் கோபத்தில் ரீத்தா தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த 26-ஆம் தேதி ரீத்தாவுக்கு அவரது கணவரில் செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய ஒரு இளம்பெண் ரீத்தாவிடம் நான் உங்கள் கணவரின் இரண்டாவது மனைவி பேசுகிறேன் என கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ரீத்தா என்ன செய்வது என்று அறியாமல் டெல்லியில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு பேருந்தில் புறப்பட்டார். அப்போதே ரீத்தா தனது தாய் மடியில் படுத்துக்கொண்டு அழுதபடி வந்தார்.
சிறிது நேரத்தில் உடல் நலம் சரியில்லாமல் மயங்கி விழுந்து பேருந்திலேயே ரீத்தா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ரீத்தாவின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
