வாகனங்களுக்கான பேன்சி நம்பர் ஒதுக்கும் நடைமுறையில் மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது புதிதாக கார் மற்றும் பைக் வாங்குபவர்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் பணம் செலுத்தி தங்களுக்கு பிடித்தமான பேன்சி எண் பெறக்கூடிய நடைமுறை அமலில் உள்ளது. ஆனால் இனி ஏல முறையில் ஃபேன்சி எண் ஒதுக்கப்படும். இதற்கான விண்ணப்ப கட்டணம் 2000 ரூபாய், பேன்சி எண்ணுக்கான அடிப்படை விலை 2000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
