சென்னை ஆவடி, கார் மோதி இழுத்துச் செல்லப்பட்டு கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவேற்காடு பள்ளிக்குப்பம், சேர்ந்த அறிவரசன் (41) இவர் அதே பகுதியில் தனியார் கால்சென்டரில் பணிபுரிந்து வந்துள்ளார். மனைவி சரண்யா (36), திருவள்ளூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இருவரும் காதல் திருமணம் செய்துக் கொண்டனர் தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர்.
அறிவழகன் மற்றும் சரண்யா இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஆவடி- பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த கார் திடீரென்று மோதி இருவரையும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்தி கார் சாலை சுவற்றில் மோதி கவிந்தது. அருகில் இருந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அறிவரசன் மற்றும் சரண்யாவின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய அரசு மருத்துவர் பாரிமார்க்ஸ் என்பவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரித்து வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் இறந்த தம்பதிகளை பற்றி அங்கு இருந்த சில நபர்களிடம் போலீசார் விசாரித்தனர். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர் இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளது. தாய், தந்தை இருவருமே உயிரிழந்ததால் குழந்தைகள் எவ்வளவு கஷ்டப்படும் என்று தெரியவில்லை. நினைக்கும் போதே மனது வலிக்கிறது என்று கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
